தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அமைச்சர் பதவியை பிடிக்க போட்டா போட்டி: என்.ஆர்.காங்., பா.ஜ.,வினர் தீவிரம்

அமைச்சர் பதவியை பிடிக்க போட்டா போட்டி: என்.ஆர்.காங்., பா.ஜ.,வினர் தீவிரம்

அமைச்சர் பதவியை பிடிக்க போட்டா போட்டி: என்.ஆர்.காங்., பா.ஜ.,வினர் தீவிரம்


UPDATED : மே 09, 2026 10:35 PM

ADDED : மே 09, 2026 10:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2026 10:35 PM ADDED : மே 09, 2026 10:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்.,-12; பா.ஜ.,-4; அ.தி.மு.க.,-1; ல.ஜ.க.,-1 என இந்த கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த முறை என்.ஆர்.,காங்., - பா.ஜ., கூட்டணியில் ஆட்சி அமைத்த போது, முதல்வர், 3 அமைச்சர்கள், துணை சபாநாயகர், ஆகிய 5 பதவிகளை எடுத்துக் கொண்டது. சபாநாயகர், உள்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலம் ஆகிய 2 அமைச்சர்கள் மற்றும் டில்லி மேலிட பிரதிநிதி ஆகிய 4 பதவிகளை பா.ஜ., வாங்கி கொண்டது.

இந்நிலையில், கடந்த முறை போல் இரண்டு அமைச்சர், (இதில் உள்துறை இலாகா கிடையாது) துணை சபாநாயகர் பதவி மட்டுமே வழங்கப்படும் என்று முதல்வர் தரப்பில் அழுத்தமாக பா.ஜ.,விற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் சபாநாயகர் பதவியை என்.ஆர்.காங்., எடுத்து கொள்ளும் என்று தெரிகிறது. 5 பேர் அமைச்சர் கொண்ட புதுச்சேரி சட்டசபையில், ல.ஜ.க., சார்லஸ் மார்ட்டின் அமைச்சர் பதவியை பெற, ரங்கசாமி, பா.ஜ.,தலைவர்களை சந்தித்து அழுத்தம் கொடுத்து வருகிறார். இம்முறை காரைக்காலுக்கு 1 அமைச்சர், புதுச்சேரியை சேர்ந்த புதியவர் ஒருவருக்கு அமைச்சர் வழங்கலாம் என்று பா.ஜ., விரும்புகிறது. ஆனால் கடந்த முறை, அமைச்சர் பதவியில் இருந்தவர்கள் தங்களுக்கு அமைச்சர் வேண்டும் என்று பா.ஜ.,வில் அடம் பிடித்து வருகின்றனர். என்.ஆர்.காங்.,கில் கடந்த முறை அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் இந்த முறை எங்களுக்கு வாய்ப்பு வேண்டும் ரங்கசாமியை சுற்றி வருகின்றனர்.

என்.ஆர்.காங்., கட்சிக்கான சபாநயகர் மற்றும் 3 அமைச்சர்கள் பதவியை பிடிக்க ராஜவேலு, மல்லாடி கிருஷ்ணராவ், சிவக்கொழுந்து, நாராயணசாமி உள்ளிட்டோர், அப்பா பைத்திய சாமியின் அருள் வேண்டி தவமிருந்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us