/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
11 தொகுதிகளுக்கு என்.ஆர்.காங்., நிர்வாகிகள் நியமனம்
/
11 தொகுதிகளுக்கு என்.ஆர்.காங்., நிர்வாகிகள் நியமனம்
11 தொகுதிகளுக்கு என்.ஆர்.காங்., நிர்வாகிகள் நியமனம்
11 தொகுதிகளுக்கு என்.ஆர்.காங்., நிர்வாகிகள் நியமனம்
ADDED : பிப் 11, 2025 05:49 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 11 தொகுதிகளுக்கு என்.ஆர்.காங்., துணை நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த 2011ம் ஆண்டு என்.ஆர்.காங்., கட்சியை முதல்வர் ரங்கசாமி துவக்கினார். அந்த கட் சிக்கு இதுவரை நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 7 ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த ஆண்டு விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு 12 தொகுதிகளுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து நேற்று 11 தொகுதிகளுக்கு துணை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, ராஜ்பவன் தொகுதி துணைத் தலைவர்களாக சங்கர், கிருஷ்ணசாமி, பொதுச்செயலாளர் கந்தசாமி, செயலாளர்களாக மாணிக்கம், சந்திரகேசவன், உருளையன்பேட்டை துணைத் தலைவர்களாக ஜமீலா, இந்திரராவ் பொதுச்செயலாளர் ராஜாராம், செயலாளர்களாக தாமோதர கண்ணன், மணிகண்டன். கதிர்காமம் துணைத் தலைவர்களாக பழனி, பரந்தாமன், பொதுச் செயலாளராக அப்பாதுரை, செயலாளர்களாக குமார், குப்புசாமி.
காலாப்பட்டு துணைத் தலைவர்களாக நாராயணசாமி, வெங்கடேசன், பொதுச் செயலாளராக செல்வக்குமார். செயலாளர்களாக சுப்பராயன், உமாபதி, திருபுவனை துணைத் தலைவர்களாக சக்திவேல், லட்சுமண பெருமாள், பொதுச் செயலாளராக பாலு, செயலாளர்களாக புருஷோத்தமன், முருகவேலு, நெல்லித்தோப்பு துணைத் தலைவர்களாக கணபதி, பிரபு குமார், பொதுச் செயலாளராக சவுந்தரராஜன், செயலாளர்களாக சந்திரன், சவுந்தர், நெட்டப்பாக்கம் துணைத் தலைவர்களாக அனந்த கிருஷ்ணன், ரங்கநாதன், பொதுச்செயலாளராக ஆறுமுகம், செயலாளர்களாக விசுவநாதன், சரவணன், பாகூர் துணைத் தலைவர்களாக சிவசங்கர், மாறன், பொதுச் செயலாளராக செந்தில்குமார், செயலாளர்களாக செந்தில்குமரன். சுப்பிரமணியன், லாஸ்பேட்டை துணைத் தலைவர்களாக கஜபதி, திலகவதி, பொதுச் செயலாளராக சிவராஜ், செயலாளர்களாக திருநாவுக்கரசு, கோவிந்தராஜ், உப்பளம் துணைத் தலைவர்களாக அசன் முகமது, முரளிதரன், பொதுச்செயலாளராக லட்சுமணன், செயலாளர்களாக மணிகண்டன், ஈஸ்வரன், வில்லியனூர் துணைத் தலைவர்களாக எம்பெருமான், செந்தாமாரைக்கண்ணன், பொதுச்செயலாளராக முருகன், செயலாளர்களாக பன்னீர்செல்வம், லதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.