/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.காங். , துவக்க விழா எம்.எல்.ஏ., அன்னதானம்
/
என்.ஆர்.காங். , துவக்க விழா எம்.எல்.ஏ., அன்னதானம்
ADDED : பிப் 08, 2025 06:18 AM

அரியாங்குப்பம்,: அரியாங்குப்பத்தில் என்.ஆர்.காங்., ௧௫ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, பாஸ்கர் எம்.எல்.ஏ., கொடியேற்றி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
புதுச்சேரி என்.ஆர்., காங்., 15ம் ஆண்டு துவக்க விழா அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, தேங்காய்த்திட்டில் பாஸ்கர் எம்.எல்.ஏ., கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பொதுமக்களுக்கு நாட்டு சர்க்கரை பாக்கெட் மற்றும் அன்னதானம் வழங்கினார்.
தொடர்ந்து, அரியாங்குப்பம், வீராம்பட்டினம் சாலை சந்திப்பு, பிரம்மன் சதுக்கம் பகுதிகளில் எம்.எல்.ஏ., இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் என்.ஆர்., காங்., பிரமுகர்கள் காமராஜ், வேல்முருகன், சங்கர், திருமலை, நரேஷ், சதீஷ் உட்பட என்.ஆர்., காங்., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.