/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிள்ளையார்குப்பத்தில் என்.எஸ்.எஸ்., முகாம்
/
பிள்ளையார்குப்பத்தில் என்.எஸ்.எஸ்., முகாம்
ADDED : பிப் 27, 2026 05:03 AM

பாகூர்: ஸ்கூல் ஆப் அலைடு அன்ட் ஹெல்த்கேர் சயின்ஸ் கல்லுாரி சார்பில், பிள்ளையார்குப்பம் கிராமத்தில் சிறப்பு என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது.
பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கீழ் ஸ்கூல் ஆப் அலைடு அன்ட் ஹெல்த்கேர் சயின்ஸ் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரி மற்றும் தேசிய சேவை திட்டம், புதுச்சேரி அலகு சார்பில், பிள்ளையார்குப்பம் கிராமத்தில் 7 நாள் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் உமா, கிராமத் தலைவர் ரவி ஆகியோர் முன்னிலையில் முகாம் துவங்கியது.
இளைஞர்கள் கிராமப்புற வளர்ச்சியில் செயற்பாட்டுடன் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்து அவர்கள் வலியுறுத்தினர்.
முகாமில், என்.எஸ்.எஸ்., தன்னார்வலர்கள் கோவில் வளாகம், சிற்பங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினைப் கிரா மத்திற்கு கல்விச் சுற்றுலா மேற்கொள்ளப்பட்டு, பாரம்பரிய கலைகள், மண்பாண்டம் தயாரித்தல் மற்றும் உயிரிசை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பல், கண் பரிசோதனை முகாம் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை வழங்கப்பட்டது. பறவை காய்ச்சல் குறித்தும், வாக்காளர் விழிப்புணர்வு போஸ்டர் போட்டி மற்றும் பேரணி நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் தமிழரசி செய்திருந்தார்.

