/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்துரத்தினம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்
/
முத்துரத்தினம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்
முத்துரத்தினம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்
முத்துரத்தினம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்
ADDED : செப் 25, 2024 04:08 AM

புதுச்சேரி, : புதுச்சேரி கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் நேற்று துவங்கியது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் மருத்துவர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் கலந்து கொண்டு முகாமினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக மாநில நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளியளவில் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு, முகாம் குறித்து விளக்கினர்.
மருத்துவர் ரத்தினவேல் காமராஜன், மருத்துவர் ரங்கநாயகி முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி முதல்வர் கவிதா, பள்ளி ஆலோசகர் ரத்தின பிரியா ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு குறிப்பேடுகள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ஜெயந்தி, முன்னாள் திட்ட அலுவலர் நெடுஞ்செழியன், பள்ளி பொறுப்பாளர்கள் ஜஸ்டின், ஜீவா ஆகியோர் செய்திருந்தனர்.