ADDED : நவ 18, 2024 07:03 AM

புதுச்சேரி ; புதுச்சேரியில் கல்லுாரி பேராசிரியர் செந்தில் வினோத் எழுதிய நுால்களை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.
புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி பேராசிரியர் செந்தில் வினோத், 'கல்வியில் இயந்திர கற்றல்; உளவியல் நுண்ணறிவு பயன்பாடு' மற்றும் 'பாலினம், பள்ளி சமூகம் மற்றும் பெண்கள் கல்வி பற்றிய கண்ணோட்டங்கள்' ஆகிய இரு நுால்களை எழுதினார்.
இந்த நுால்களை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். முதல் பிரதியினை புதுச்சேரி பல்கலைக்கழக கல்வியியல் துறை டீன் ஸ்ரீகலா பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் காஞ்சி மா முனிவர் பட்ட மேற்படிப்பு மையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் செல்வராஜ், பாலா பழனி, பேராசிரியர் அன்பு, அருள் திருமுருகன், நுண்கலை ஆசிரியர் மார்க்கண்டேயன், நேஷனல் அகாடமிக் பிரஸ் மற்றும் சாந்தி புக்ஸ் பப்ளிகேஷன் நிறுவன நிர்வாகிகள் பங்கேற்றனர்.