/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கம்பம் விழுந்து செவிலியர் உயிரிழப்பு
/
மின் கம்பம் விழுந்து செவிலியர் உயிரிழப்பு
ADDED : அக் 07, 2025 12:52 AM
புதுச்சேரி; மரக்காணம் அடுத்த மஞ்சக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு இவரது மனைவி தயாவதி, 35; இவர் நர்சிங் முடித்து விட்டு, மரக்காணம் பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இவர் கனகசெட்டிகுளத்தில், தனது உறவினரை பார்க்க நேற்று முன்தினம் இரவு, பிள்ளையார் கோவில் தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது பலத்து காற்று வீசியதால் சாலையில் இருந்த ஹைமாஸ் மின் கம்பம் திடீரென சாய்ந்து அவரது தலையில் விழுந்தது. அதில், பலத்த காயமடைந்த, அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து, காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.