/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாகியில் நாற்றுப் பண்ணை பணி; அமைச்சர் துவக்கி வைப்பு
/
மாகியில் நாற்றுப் பண்ணை பணி; அமைச்சர் துவக்கி வைப்பு
மாகியில் நாற்றுப் பண்ணை பணி; அமைச்சர் துவக்கி வைப்பு
மாகியில் நாற்றுப் பண்ணை பணி; அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஜன 20, 2024 05:56 AM

புதுச்சேரி : மாகியில் நாற்றுப் பண்ணை அமைக்கும் பணியினை வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், கடந்த 1995ம் ஆண்டு, மாகி செருக்கல்லாயி பகுதியில், வேளாண் துறை கையகப்படுத்திய 1.98 ஏக்கர் இடத்தில் நாற்றுப்பண்ணை அமைக்கும் பணி நேற்று துவங்கியது. இப்பணியினை வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார். விழாவில் ரமேஷ் பரமபத் எம்.எல்.ஏ., மாவட்ட செயலர் ஷிவராஜ் மீனா, இயக்குனர் வசந்தகுமார் உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் பங்கேற்றனர்.
நாற்றுப்பண்ணையில், ஆண்டிற்கு ஒரு பருவத்தில் மட்டும் பூக்கும் செடிகள், அனைத்து பருவங்களிலும் பூக்கும் செடிகள், அடர்த்தி தாவரங்கள், காய்கறி செடிகள், பழச்செடிகள், மூலிகைச் செடிகள், சமுதாய காடுகள் வளர்ப்பிற்கு தேவைப்படும் மரக் கன்றுகள் வளர்க்கப்பட உள்ளன.
மேலும் தென்னை, பாக்கு, கருமிளகு, அலங்கார செடிகள், பூ வகை செடிகள், காய்கறி நாற்றுகள், சமூக காடுகளுக்கான மரக்கன்றுகள் ஆகியவையும் வேளாண் துறை நேரடி மேற்பார்வையில் வளர்க்கப்பட உள்ளன. விவசாயிகளுக்கு காய்கறி விதைகள், சூடோமோனாஸ் உயர் ரக பூச்சிக்கொல்லி, தெளிப்பான் வழங்கப்பட உள்ளது.
தொடர்ந்து பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள பூஞ்செடிகள் விற்பனை மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.