தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/செவிலியர் உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

செவிலியர் உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

செவிலியர் உயிரிழப்பு; போலீஸ் விசாரணை


ADDED : பிப் 27, 2024 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 11:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : உடல் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்ற செவிலியர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

பாக்கமுடையான்பட்டு ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் ஞானசுந்தரம் மனைவி காந்திமதி, 55; திண்டிவனம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி செய்து வந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாமல், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் உடல் பரிசோதனைக்காக கணவருடன் சென்னைக்கு ஆம்புலன்சில் சென்றார். இ.சி.ஆரில் கொட்டுப்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர், காந்திமதி ஏற்கனவே, இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து, அவரது கணவர் கொடுத்த புகாரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us