/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலி பணியிடங்களை நிரப்ப கோரி செவிலிய அதிகாரிகள் வாயிற்கூட்டம்
/
காலி பணியிடங்களை நிரப்ப கோரி செவிலிய அதிகாரிகள் வாயிற்கூட்டம்
காலி பணியிடங்களை நிரப்ப கோரி செவிலிய அதிகாரிகள் வாயிற்கூட்டம்
காலி பணியிடங்களை நிரப்ப கோரி செவிலிய அதிகாரிகள் வாயிற்கூட்டம்
ADDED : நவ 08, 2025 01:41 AM

புதுச்சேரி: செவிலிய அதிகாரிகள் சங்கத்தினர் வாயிற்கூட்டம் அரசு மருத்துவமனையில் நடந்தது.
சங்கத்தின் அமைப்பு செயலாளர்சங்கீதா தலைமை தாங்கினார்.
செயலாளர்ஹரிதாஸ் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் முனுசாமி விளக்க உரையாற்றினார்.கூட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தற்போது பணியாளர் பற்றாக்குறை உள்ள நிலையில் புதிய வார்டுகள் மற்றும் பிரிவுகள் திறப்பதை நிறுத்தி, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.சங்கம் முன்வைத்துள்ள ஊழியர்கள் நலன் சார்ந்த அனைத்து கோரிக்கைகளை சுகாதார இயக்குநர்பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தப்பட்டது. சங்க அமைப்பு செயலாளர் செல்வி நன்றி கூறினார்.