/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலி பணியிடங்களை நிரப்ப செவிலிய அதிகாரிகள் கோரிக்கை
/
காலி பணியிடங்களை நிரப்ப செவிலிய அதிகாரிகள் கோரிக்கை
காலி பணியிடங்களை நிரப்ப செவிலிய அதிகாரிகள் கோரிக்கை
காலி பணியிடங்களை நிரப்ப செவிலிய அதிகாரிகள் கோரிக்கை
ADDED : நவ 26, 2025 07:54 AM
புதுச்சேரி: செவிலிய அதிகாரிகள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என செவிலிய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சங்கத் தலைவர் சுனிலாகுமாரி கூறியதாவது:
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனையில்புதிய வார்டுகள் திறக்கப்பட்டுள்ளதால், செவிலியர்களின் வேலைப்பளு பலமடங்கு அதிகரித்துள்ளது.
ஆனால், காலியாக உள்ள பணியிடங்கள் எதுவும் நிரப்பப் படாமல் உள்ளன. மேலும் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்கள் உருவாக்கப்படாமல் இருந்து வருகிறது.
போதுமான செவிலிய அதிகாரிகள் இல்லாததால் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு ஏற்படுவதுடன்,பணியாளர்களின் நலனும் பாதிக்கிறது.
சுகாதாரத் துறையின் செயல்திறன் பாதிக்கப்படாமல் இருக்க, அனைத்து செவிலிய அதிகாரிகள் பணியிடங்களும் போர்கால அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.
இல்லையெனில், போராட்டம் அறிவிக்க வேண்டிய சூழல் உருவாகும். எனவே, ஊழியர்களை போராட்டத்திற்கு தள்ளாமல் உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், செவிலிய அதிகாரிகளின் பிரச்னைகளை தீர்க்க அரசு முன்வர வேண்டும்.

