/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதிதாசன் கல்லுாரியில் ஊட்டச்சத்து மாத விழா
/
பாரதிதாசன் கல்லுாரியில் ஊட்டச்சத்து மாத விழா
ADDED : செப் 21, 2024 06:31 AM

புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி, கண்காட்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். பேராசிரியர் தனலட்சுமி வரவேற்றார். ஜிப்மர் புற்று நோய் மருத்துவத் துறையின் தலைமை மருத்துவர், பிசுவாஜித் துபாசி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பேசினார். ஊட்டச்சத்து - வாழ்க்கை சுழற்சி அணுகுமுறை என்ற தலைப்பில், கண்காட்சி நடந்தது.
மேலும், நோய் வராமல் தடுப்பதற்கு, ஆரோக்கியம் பற்றியும், சத்தான சரிவிகித உணவு, தினசரி உடற்பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த கண்காட்சிகள் இடம்பெற்றன. நிகழ்ச்சியை பேராசிரியர் மலர்விழி தொகுத்து வழங்கினார்.