தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு செவிலியர் கல்லுாரியில் உறுதிமொழி ஏற்கும் விழா

அரசு செவிலியர் கல்லுாரியில் உறுதிமொழி ஏற்கும் விழா

அரசு செவிலியர் கல்லுாரியில் உறுதிமொழி ஏற்கும் விழா


ADDED : ஜன 29, 2025 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2025 05:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கதிர்காமம், இந்திராகாந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் செவிலியர் கல்லுாரியில் புதிதாக சேர்க்கப்பட்ட செவிலிய மாணவர்களுக்கான ஒளி விளக்கேற்றி உறுதிமொழி ஏற்கும் விழா நடந்தது.

கல்லுாரி முதல்வர் பிரமிளா தமிழ்வாணன் வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி புதியதாக பயிற்சியைத் தொடங்க இருக்கும் செவிலிய மாணவர்களுக்கு ஒளி விளக்கேற்றி தலைமை உரையாற்றினார். முனைவர் கணேஷ் ஆண்டறிக்கை வாசித்தார்.

சபாநாயகர் செல்வம், ரமேஷ் எம்.எல்.ஏ., இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி இயக்குநர் உதயசங்கர், கல்லுாரி தலைவர் ராமச்சந்திர விபட், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

செவிலிய பொறுப்பு அதிகாரி சுமதி ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் உரையை வாசிக்க செவிலிய மாணவ, மாணவியர் அதனை வழி மொழிந்தனர்.

அன்னை தெரேசா பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் செவிலிய கல்லுாரியின் முனைவர் ஜாஸ்மின் விளக்கவுரையாற்றினார். விழாவில் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us