/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்ஸ்டாகிராமில் ஆபாச கமெண்ட் : சிறுவன் உட்பட 4 பேர் மீது வழக்கு
/
இன்ஸ்டாகிராமில் ஆபாச கமெண்ட் : சிறுவன் உட்பட 4 பேர் மீது வழக்கு
இன்ஸ்டாகிராமில் ஆபாச கமெண்ட் : சிறுவன் உட்பட 4 பேர் மீது வழக்கு
இன்ஸ்டாகிராமில் ஆபாச கமெண்ட் : சிறுவன் உட்பட 4 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 14, 2025 12:23 AM
கோட்டக்குப்பம் : இன்ஸ்டாகிராமில், ஆபாச கமெண்ட் செய்ததால் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, 16 வயது சிறுவனை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புதுச்சேரி, வாணரப்பேட்டை, பிரான்சுவா தோட்டத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது 16 வயது மகன் இன்ஸ்டாகிராமில், 'ரீல்ஸ்' பதிவிடுவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் அவர் பதிவிட்ட ரீல்ஸ் பதிவிற்கு, புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளை தோட்டத்தை சேர்ந்த சிறுவன் ஆபாச கமெண் ட் செய்துள்ளார்.
இதனால், ஜெயராஜ் மகனுக்கும், அந்த சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டு, முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி பூங்காவில் இருந்த ஜெயராஜ் மகனை, சின்னக் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த ஜாக் சஞ்ஜெய், சரத், சுனில் ஆகிய மூன்று வாலிபர்கள் சேர்ந்து தாக்கினர்.
இதுகுறித்த புகாரின்பேரில், 16 வயது சிறுவன் உட்பட 4 பேர் மீது கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.