ADDED : ஜூன் 01, 2026 09:31 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: மடுகரை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது பில்லுார் பகுதியைச் சேர்ந்த பாபு, 40, என்பவர், மது போதையில், மடுகரை - பட்டம்பாக்கம் சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.
அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
இதேபோல் காலப்பட்டு பகுதியில் ஆபாசமாக பேசிய மாத்துாரைச் சேர்ந்த சுந்தரம், 26; கரிக்கலாம்பாக்கத்தில் ஆபாச மாக பேசிய கீழ்குமாரமங்கலம் மணிபாலன், 34, ஆகியோரை அந்தந்த போலீசார் கைது செய்தனர்.
