/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிதிசார் கல்வியறிவு வாரம் கடைபிடிப்பு
/
நிதிசார் கல்வியறிவு வாரம் கடைபிடிப்பு
ADDED : பிப் 11, 2026 04:38 AM

புதுச்சேரி: ஒவ்வொரு ஆண்டும், ரிசர்வ் வங்கி சார்பில், நிதிசார் கல்வியறிவு வாரம்கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு,பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,கடந்த 9ம் தேதி முதல் நாளை மறுநாள் (13ம் தேதி) வரை, நிதிசார் கல்வியறிவு வாரம் கடைக்கப்பிடிக்கப்படுகிறது.
மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், கலெக்டர் அலுவலகத்தில்விழிப்புணர்வு பிரசார பதாகைகள் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் குலோத்துங்கன் முன்னிலையில், விழிப்புணர்வு பதாகைகள் வெளியிடப்பட்டது. வங்கியாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெங்கட சுப்ரமணியன், மாவட்ட முன்னோடிகள் வங்கி மேலாளர் சதீஷ்குமார் உட்பட பல்வேறு வங்கிகளில் இருந்து அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில்,பொதுமக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தி, நிதி அதிகரித்தல் மற்றும் பாதுகாப்பான வங்கி சேவைகளை பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் இதர பங்குதாரர்களுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கள செயல்பாடுகளை, செயல்படுத்த இருக்கிறது.
இதுபோன்ற நடவடிக்கைகள், இந்த ஆண்டு முழுதும் இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

