தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரான்ஸ் தேசிய தினம் கடைப்பிடிப்பு 

பிரான்ஸ் தேசிய தினம் கடைப்பிடிப்பு 

பிரான்ஸ் தேசிய தினம் கடைப்பிடிப்பு 


UPDATED : ஜூலை 14, 2026 05:38 PM

ADDED : ஜூலை 14, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2026 05:38 PM ADDED : ஜூலை 14, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 237 வது பிரான்ஸ் தேசிய தினம் கடைபிடிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி மக்கள் புரட்சியின் மூலம் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, மக்களாட்சியை நிறுவப்பட்டது. அதன் காரணமாக, ஆண்டுதோறும் ஜூலை மாதம் 14-ம் தேதி பிரான்ஸ் தேசிய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, புதுச்சேரியில் 237-வது பிரான்ஸ் தேசிய தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி கடற்கரைச் சாலையில் உள்ள போர் வீரர் நினைவுத் துாணில் புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டுத் துணைத் துாதர் ஜீன்-பிலிப் ஹூதர், அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதில், இந்தியா, பிரான்ஸ் நாட்டு தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us