/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓடையில் ரூ. 1.95 கோடியில் தடுப்பு சுவர் பணி துவக்கம்
/
ஓடையில் ரூ. 1.95 கோடியில் தடுப்பு சுவர் பணி துவக்கம்
ஓடையில் ரூ. 1.95 கோடியில் தடுப்பு சுவர் பணி துவக்கம்
ஓடையில் ரூ. 1.95 கோடியில் தடுப்பு சுவர் பணி துவக்கம்
ADDED : செப் 05, 2025 02:48 AM

வில்லியனுார்: மங்கலம் தொகுதியில் ரூ.1.95 கோடி மதிப்பில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை, அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
மங்கலம் தொகுதி, செம்பியபாளையம் குஞ்சன் ஓடையில் இருபுறமும் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகஎம்.எல்.ஏ.,விடம் வலியுறுத்தி வந்தனர். அதையடுத்து, பொதுப்பணித்துறை மூலம், 1 கோடியே 95 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான பணியை, வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்,செயற்பொறியாளர் நீர்பாசனக் கோட்டம் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் ஸ்ரீநாத், இளநிலைப்பொறியாளர் அருள்முருகன் மற்றும் என்.ஆர்.காங்., பிரமுகர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.