சித்தானந்த சுவாமி கோவிலில் 26ம் தேதி குரு பெயர்ச்சி பூஜை
சித்தானந்த சுவாமி கோவிலில் 26ம் தேதி குரு பெயர்ச்சி பூஜை
UPDATED : மே 15, 2026 06:49 PM
ADDED : மே 15, 2026 06:42 PM
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் வரும் 26ம் தேதி குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடக்கிறது.
நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான் வரும் 26ம் தேதி காலை 11 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த இடப் பெயர்ச்சியையொட்டி, புதுச்சேரி கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனையொட்டி, வரும் 26ம் தேதி காலை 6 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்யப்படுகிறது. காலை 7:30 மணிக்கு கணபதி ேஹாமம், குரு பகவான் காயத்ரி மந்திர ேஹாமம், நவக்கிரக ேஹாமம் நடக்கிறது. காலை 10 மணிக்கு குரு பகவானுக்கு மகா அபிேஷகத்தை தொடர்ந்து காலை 11 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.
குரு பெயர்ச்சி மகா ேஹாமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கலசம் மற்றும் சிறப்பு தரிசனம் செய்ய விரும்புவோர் வரும் 26ம் தேதிக்கு முன்பாக தேவஸ்தான அலுவலகத்தில் ரூ. 400 செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். மேலும், நன்கொடை அளிக்க விரும்புவோர் தேவஸ்தானத்தில் கொடுத்து ரசீது பெற்றுக் கொள்ளவும்.
மேலும், மகா அபிேஷகத்திற்கு வேண்டி பால், தயிர், நெய், பழவகைகள், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்கள் வழங்க விருப்பம் உள்ளவர்கள் 26ம் தேதி காலை 10:00 மணிக்கு முன்பாக தேவஸ்தானத்தில் வழங்கிட வேண்டும்.
குரு பெயர்ச்சி பூஜைக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
