தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அதிகாரி சஸ்பெண்ட்

 அதிகாரி சஸ்பெண்ட்

 அதிகாரி சஸ்பெண்ட்


ADDED : ஜூலை 22, 2026 03:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 03:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காமாட்சி அம்மன் கோவலுக்கு சொந்தமான 64 ஆயிரம் சதுரடி இடம் நிலம் போலி ஆவணம் தயாரித்து கடந்த 2010ம் ஆண்டு மனைகளாக விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து புகாரின் பேரில் கடந்த 2021ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி.,போலீசார் வழக்கு பதிந்து, போலி ஆவயங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக வில்லியனூர் சார் பதிவாளர் சிவசாமி, நில அளவைத்துறை இயக்குநர் ரமேஷ், செட்டில்மென்ட் அதிகாரியாக பணியாற்றிய மீன்வளத்துறை இயக்குநர் பாலாஜி உள்ளிட்ட 16 பேர் கடந்த 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இவ்வழக்கு லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், கோவில் நிலத்தை கடந்த 2010ம் ஆண்டு உழவர்கரை சப் ரிஜிஸ்டாராக இருந்த, தற்போதைய செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் சுரேஷ்ராஜ், காமாட்சி அம்மன் கோவில் நிலத்தை போலி ஆவணங்களின் பேரில் பதிவு செய்தது தெரிய வந்தது.

அதன்பேரில், அவரை கடந்த 11ம் தேதி கைது செய்து ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, சுரேஷ்ராஜை 'சஸ்பெண்ட்' செய்து நேற்று முன்தினம் அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us