தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சப் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை

 சப் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை

 சப் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை


ADDED : மார் 20, 2026 07:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 07:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் சப் கலெக்டர் தலைமையில் போலீஸ் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

புதுச்சேரியில் வரும் ஏப். 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதற்காக தேர்தல் துறை பல்வேறு நடவடிக்கைளை தீவிர படுத்தி வருகிறது. இந்நிலையில் வில்லியனுார் துணை கலெக்டர் அலுவலகத்தில் தெற்கு பகுதி எஸ்.பி., சுப்ரமணியன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், திருபுவனை மற்றும் மண்ணாடிப்பட்டு தொகுதியை சேர்ந்த தேர்தல் அதிகாரிகள், வாக்குச்சாவடி பிரிவு அலுவலர்களுடன் சப் கலெக்டர் குமரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் இரு தொகுதிகளில் உள்ள பதற்றமான ஓட்டுச்சாவடிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதில் தேர்தல் நேரத்தில் எவ்வித அசம்பாவிதமும் நடக்காத வகையில் போலீசார் தீவிர கணகாணிப்பில் ஈடுபடவேண்டும். தேர்தல் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். தொகுதியில் ஏதேனும் பிரச்னை, அசம்பாவிதம் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தால் உடனடியாக போலீஸ் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தகவல் கொடுக்க வேண்டும். தேர்தல் நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us