/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காட்டுக்குப்பம் தொழிற்பேட்டையை மேம்படுத்த அதிகாரிகள் ஆலோசனை
/
காட்டுக்குப்பம் தொழிற்பேட்டையை மேம்படுத்த அதிகாரிகள் ஆலோசனை
காட்டுக்குப்பம் தொழிற்பேட்டையை மேம்படுத்த அதிகாரிகள் ஆலோசனை
காட்டுக்குப்பம் தொழிற்பேட்டையை மேம்படுத்த அதிகாரிகள் ஆலோசனை
ADDED : மார் 08, 2024 06:43 AM
பாகூர் : காட்டுக்குப்பம் பிப்டிக் தொழிற்பேட்டையை மேம்படுத்துவது தொடர்பாக, தொழில் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
பாகூர் தொகுதிக்குட்பட்ட காட்டுக்குப்பம் கிராமத்தில் பிப்டிக் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. ஏராளமான நிறுவனங்கள் மூடிகிடக்கும் நிலையில், தற்போது சில நிறுவனங்களே இயங்கி வருகிறது.
காட்டுக்குப்பம் தொழிற்பேட்டையில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயல் திறனை உயர்த்துதல் தொடர்பாக புதுச்சேரி தொழில் துறை இயக்குனர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
காட்டுக்குப்பம் தொழிற்பேட்டையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அங்குள்ள தொழில்துறை சங்கத்தினர், தொழிலதிபர்கள், பங்குதாரர்களை, தொழில் துறை அதிகாரிகள் சந்தித்து பேசினர்.
அதில், மத்திய அரசின் நிதி உதவி திட்டங்களின் மூலமாக, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான முதலீட்டு நிதி ஆதாரத்தை ஏற்படுத்தி கொடுத்தல், தொழில் நடைமுறையில் உள்ள இடர்பாடுகளை சரி செய்தல், நிதி நிர்வாகம், மார்க்கெட்டிங், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

