/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பஸ் நிலைய மேம்பாட்டு பணிக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை☺'
/
'பஸ் நிலைய மேம்பாட்டு பணிக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை☺'
'பஸ் நிலைய மேம்பாட்டு பணிக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை☺'
'பஸ் நிலைய மேம்பாட்டு பணிக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை☺'
ADDED : ஜன 30, 2024 06:11 AM

புதுச்சேரி :
புதிய பஸ் நிலைய பணிக்கு நகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என நேரு எம்.எல்.ஏ., குற்றம்சாட்டி உள்ளார்.
அவர் முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில்;
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 30 கோடி செலவில் புதிய பஸ் நிலைய மேம்பாட்டு பணிகள் நடக்கிறது.பஸ் நிலைய கட்டுமான பணியை வரும் ஜூன் மாதத்துடன் முடிக்க வேண்டும்.
தற்போது 20 சதவீத பணிகள் கூட முடியவில்லை. உள்ளாட்சித்துறை, நகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் திட்ட பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 மாதத்திற்கு முன்பு முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் விழுப்புரம் வழித்தட பஸ்கள் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை திருவள்ளுவர் பஸ் நிலையத்தில் இருந்தும், கடலுார், சிதம்பரம் வழித்தடபஸ்கள் ஏ.எப்.டி. திடலில் இருந்தும், சென்னை மரக்காணம், தின்டிவனம் பஸ்கள் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை கமிட்டி வளாகத்தில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது.ஆனால், இவற்றை நடைமுறைபடுத்தவில்லை. பஸ் நிலையம் இயங்கி கொண்டே, கட்டுமான பணி நடப்பதால் போதிய இடவசதி இன்றி பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மறைமலையடிகள் சாலையில் பஸ்களைநிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றுவதால், டிராபிக் ஜாமும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
எனவே மாற்று இடத்தில் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறி அலட்சியம் காட்டினால் தொடர் போராட்டம் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளார்.