அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரை காரைக்காலில் அதிகாரிகள் சோதனை
அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரை காரைக்காலில் அதிகாரிகள் சோதனை
ADDED : ஏப் 07, 2026 09:45 PM

அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலுக்கு தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி, காரைக்கால், திருநள்ளாறு தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராஜசேகரன் மற்றும் திருப்பட்டினம் தொகுதி வேட்பாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோரை ஆதரித்து தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று பிரசாரம் செய்தார்.
முன்னதாக மதியம் 3:10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் அண்ணாமலை திருவேட்டக்குடி பாலிடெக்னிக் கல்லுாரிக்கு வருகை புரிந்தார். அவரது ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். பிரசாரம் முடிந்த பின் மாலை 5:30 மணிக்கு தனி ஹெலிகாப்டர் மூலம் அண்ணாமலை புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.
