/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிற்பேட்டையில் அதிகாரிகள் ஆய்வு
/
தொழிற்பேட்டையில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : பிப் 29, 2024 11:26 PM

பாகூர்: காட்டுக்குப்பம் தொழிற்பேட்டையை, தொழில்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பாகூர் தொகுதிக்குட்பட்ட காட்டுக்குப்பம் கிராமத்தில் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வந்தது. ஏராளமான நிறுவனங்கள் மூடிகிடக்கும் நிலையில், தற்போது ஒரு சில நிறுவனங்களே இயங்கி வருகிறது.
இந்நிலையில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., புதுச்சேரி அரசு தொழிற்துறை இயக்குனர் ருத்தரகவுடு, இணை இயக்குனர் முத்துக்கிருஷ்ணன், உதவி இயக்குனர் சதாசிவம் மற்றும் அதிகாரிகள் நேற்று காட்டுக்குப்பம் தொழிற்பேட்டையில், மூடிக்கிடக்கும் நிறுவனங்கள், காலியாக கிடக்கும் இடங்களை பார்வையிட்டனர்.
அப்போது, தொழில் பேட்டையில் சிறு, குறு நிறுவன உரிமையாளர்கள், ''தொழில் நடத்துவதில் ஏற்படும் பிரச்னைகள், அரசு திட்டங்களால் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், தொழிற்பேட்டையில் பாதுகாப்பு குறைபாடு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

