ADDED : ஜன 27, 2025 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்:   கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவதை தொடர்ந்து, மீன்வளத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி கடற்கரை பகுதிகளில், எப்போதும் இல்லாத அளவில், சமீப நாட்களகஆமைகள், இறந்து கரை ஒதுங்கி வருகிறது. ஆமைகள் இறந்து வருவதை அடுத்து மீன்வளத்துறை, சுற்றுச்சூழல், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆமைகளின் உடல்களை எடுத்து சென்று, எதற்காக ஆமைகள் இறந்து வருகின்றன என, ஆய்வு செய்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராட்சத ஆமை ஒன்று, இறந்து கரை ஒதுங்கியது. அப்பகுதி மீனவர்கள், மீன்வளத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, இறந்த ஆமையை, அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

