/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சபாநாயகர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு கூட்டம்
/
சபாநாயகர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு கூட்டம்
ADDED : நவ 13, 2024 09:00 PM

புதுச்சேரி; மணவெளி தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்த பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
சட்டசபை சபாநாயகர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், தாசில்தார் பிரிதிவ், செயற் பொறியாளர்கள் சந்திரகுமார், உமாபதி, ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் கோபி, அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலைப் பொறியாளர்கள் சரவணன், நடராஜன், அகிலன், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் பூரணாங்குப்பம், நல்லவாடு, தவளக்குப்பம் சாலைகளை தார் சாலையாக அமைத்தல். இடையார்பாளையம், ஞானமேடு பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலைகளை கழிவுநீர் வாய்க்காலுடன் மேம்படுத்துதல். டி.என். பாளையத்தில் புதிய தடுப்பணை அமைத்தல். புதுகுப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியில் சிமெண்ட் சாலை அமைத்தல். நோணாங்குப்பம் பகுதியில் ஆற்றங்கரையில் கழிவுநீர் வாய்க்காலுடன் புதிய சாலை அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இப்பணிகளை விரைந்து முடிக்க அனைத்து துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.