/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கட்டாந்தரையாகும் மலட்டாறு கண்டுகொள்ளாத அதிகாரிகள்--
/
கட்டாந்தரையாகும் மலட்டாறு கண்டுகொள்ளாத அதிகாரிகள்--
கட்டாந்தரையாகும் மலட்டாறு கண்டுகொள்ளாத அதிகாரிகள்--
கட்டாந்தரையாகும் மலட்டாறு கண்டுகொள்ளாத அதிகாரிகள்--
ADDED : நவ 24, 2024 04:58 AM
நெட்டப்பாக்கம் மலட்டாற்றில் பல ஆண்டுகளாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. பண்டசோழநல்லுார், வடுக்குப்பம் பகுதியில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது.
அதனைத் தடுக்க வேண்டிய, போலீஸ், வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவரவர் தகுதிக்கேற்ப வசூல் வேட்டையில் ஈடுபட்டு மணல் கொள்ளையை கண்டுக்கொள்வதில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மணல் கொள்ளையால் மலட்டாறு ஆற்றுப் படுகையில் நீர் ஆதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் மலட்டாறு கட்டாந்தரையாக மாறி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. மலட்டாற்றில் தொடரும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.