ADDED : அக் 14, 2024 04:01 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : வில்லியனுார், தில்லைநகர் வி.ஓ.சி., தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 65. இவரது மனைவி மஞ்சுளா, 60. இவர் நேற்று முன்தினம் காலை காலப்பட்டில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
