நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தருமாபுரியில் முதியவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி, தருமாபுரி, தனக்கோடி நகரை சேர்ந்தவர் ரத்தினவேல், 63. இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், 3 மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய ரத்தினவேலுக்கு, இழுப்பு நோய் உள்ளதால், அதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். மேலும், அடிக்கடி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரத்தினவேல், தனது வீட்டின் கிச்சன் சிமென்ட் சீட் கூரையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ரேணுகா புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.