தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலை விபத்தில் முதியவர் பலி

சாலை விபத்தில் முதியவர் பலி

சாலை விபத்தில் முதியவர் பலி


ADDED : அக் 03, 2024 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2024 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர் : குறுக்கே ஓடிவந்த மாட்டின் மீது பைக் மோதியதால், நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாகூர் அடுத்துள்ள குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி 69; இவர் நேற்று முன்தினம் மாலை குருவிநத்தம் -- முள்ளோடை சாலையில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக சென்ற மாடு திடீரென குறுக்கே ஓடி, பைக் அதன் மீது மோதியதால், தண்டபாணி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us