தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர் மாயம்

முதியவர் மாயம்

முதியவர் மாயம்


ADDED : அக் 02, 2024 02:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2024 02:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு ரெட்டியார் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 71; கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி. ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

குடிப்பழக்கம் காரணமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, தட்சிணாமூர்த்தி கோபித்து கொண்டு வெளியே சென்றுவிட்டு, சில நாட்கள் கழித்து வருவது வழக்கம்.

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, கோபித்து கொண்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது மனைவி முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us