நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: மூதாட்டி துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலுார் சாலை, முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வராசு மனைவி பிருந்தாவதி, 74; இவர் நேற்று முன்தினம் தனது மகனுடன் பேசி விட்டு படுக்க சென்றார். காலையில் எழுந்து பார்க்கும் போது, அருகில் இருந்த மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து, புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

