ADDED : ஏப் 22, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வயிற்று வலியால் அவதிப்பட்ட மூதாட்டி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொம்பாக்கம், கமலம் நகரை சேர்ந்தவர் அய்யனார் மனைவி சுந்தராம்பாள், 60; வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும், வலி குணமாகவில்லை.
இதனால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டுக் கொண்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
