ADDED : மார் 14, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கார் மோதிய விபத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருமாம்பாக்கம் அடுத்துள்ள ஆலடிமேடு கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள் 72; இவர் நேற்று முன்தினம் மதியம் கிருமாம்பாக்கம் இந்தியன் வங்கியில் பென்ஷன் தொகை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினார். வங்கியின் எதிரே சாலையை கடக்க முயன்றார். அப்போது, கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக காளியம்மாள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு ஆறுபடை வீடு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.
கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

