
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மனநலம் பாதித்த மூதாட்டி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, சண்முகபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மாவதி, 84. இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், தனியாக வசித்து வந்தார். இவரது மகன் பக்கத்து வீட்டில் வசித்தபடி, பத்மாவதிக்கு உணவுகொடுத்து வந்தார்.
தனிமையின் காரணமாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த பத்மாவதி கடந்த 11ம் தேதி காலை 8:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் 0413-2271031 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.