நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 44; தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது தாய் சந்திரா ,65; நுரையீரல் மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
இதன் காரணமாக அவர் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் காலை மணிகண்டன் தன்னுடைய மகள் பிறந்த நாளுக்கு துணி எடுப்பதற்காக கடலுார் சென்றார்.
மாலை திரும்பி வந்து பார்த்தபோது, அவரது தாய் சந்திரா வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.