நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்ட மூதாட்டி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஏம்பலம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோதை, 80. இவர் சிறுநீரக, மூட்டுவலி பிரச்னைக்கு சிகிச்சை எடுத்து வந்தார்.
வலியால் அவதிப்பட்ட கோதை நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறத்தில் உள்ள சாத்துக்குடி மரத்தில் நைலான் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.