/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒலிம்பிக் சங்கத்தின் புதிய நியமனம் செல்லாது பொதுச் செயலாளர் அறிவிப்பு

ADDED : பிப் 18, 2026 04:28 AM
புதுச்சேரி: ஒலிம்பிக் சங்கத்தின் புதிய பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது என, பாண்டிச்சேரி ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் தனசேகர் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பாண்டிச்சேரி ஒலிம்பிக் சங்கத்தின் 4 ஆண்டு பதவிக்காலம் கடந்த டிசம்பர் 10ம் தேதியுடன் முடிந்து விட்டது. இந்த கமிட்டிக்கு எந்த ஒரு நபரையும்புதிதாக எடுப்பதற்கோ, சேர்ப்பதற்கோ அதிகாரம் இல்லை. பொதுக்குழுவைக் கூட்டி தேர்தல் நடத்த மட்டுமே அதிகாரம் உள்ளது.
கடந்த 12ம் தேதி சங்கத்திற்கு புதிய பொது செயலாளராக வளவனைநியமித்து தலைவர் அறிவித்துள்ளார் என, கடந்த 12ம் தேதி செய்திவந்துள்ளது. இது சங்கத்தின் சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.
ஆகவே, பதவிக்காலம் முடிந்த பிறகுஒலிம்பிக் சங்க விதிகளின் படி, தேர்தல் நடத்தி புதிய கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதுவே முறையானசெயலாகும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.