/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிதாக குடிநீர் குழாய் அமைக்க ஓம்சக்தி சேகர் கோரிக்கை
/
புதிதாக குடிநீர் குழாய் அமைக்க ஓம்சக்தி சேகர் கோரிக்கை
புதிதாக குடிநீர் குழாய் அமைக்க ஓம்சக்தி சேகர் கோரிக்கை
புதிதாக குடிநீர் குழாய் அமைக்க ஓம்சக்தி சேகர் கோரிக்கை
ADDED : செப் 20, 2025 06:59 AM

புதுச்சேரி : அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் வீரசெல்வத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
நெல்லித்தோப்பு தொகுதி சாரம் பாலம் முதல் வேல்முருகன் நகர் வரை உள்ள வாய்க்காலை துார்வார வேண்டும்.
மாசுபட்ட குடிநீரால் பாதிக்கப்பட்டுள்ள சக்தி நகர் பகுதியில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை விரைவு படுத்த வேண்டும். சக்தி நகரில் புதிதாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட வேண்டும்.
நெல்லித்தோப்பு கஸ்துாரிபாய் நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதிதாக அமைத்து தர வேண்டும்.
தொகுதி முழுதும் உப்பு கலந்த நீர் அதிகம் வருவதால், அதனை உரிய பரிசோதனை செய்து புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட வேண்டும்.
திருவள்ளுவர் சாலை வாய்க்கால் உடனடியாக துார் வாரப்பட்டு சாலை அமைக்கப்பட வேண்டும்.
லெனின் வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட வாய்க்கால் துார் வாரப்பட வேண்டும்.
அண்ணா நகர், திருமால் நகர், டி.ஆர்.நகர், வேல்முருகன் நகர் ஆகிய பகுதிகளில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சந்திப்பின்போது, நிர்வாகிகள் சங்கர், வெங்கடேசன், குப்புசாமி, புகழ் பாரி, முனிரத்தினம், தம்பா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.