/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாலுகா அலுவலகங்களில் மாணவர்களுக்கு அடிப்படை வசதி ஒம்சக்தி சேகர் கோரிக்கை
/
தாலுகா அலுவலகங்களில் மாணவர்களுக்கு அடிப்படை வசதி ஒம்சக்தி சேகர் கோரிக்கை
தாலுகா அலுவலகங்களில் மாணவர்களுக்கு அடிப்படை வசதி ஒம்சக்தி சேகர் கோரிக்கை
தாலுகா அலுவலகங்களில் மாணவர்களுக்கு அடிப்படை வசதி ஒம்சக்தி சேகர் கோரிக்கை
ADDED : மே 17, 2025 12:16 AM
புதுச்சேரி: அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:
தற்போது பொதுத் தேர்வுகள் முடிந்து மாணவர்கள் உயர் கல்விக்காகவும், வேலைவாய்ப்பு தேடலுக்காகவும் தாலுகா அலுவலகங்களை பெருமளவில் நாடுகின்றனர்.
போதிய இட வசதி, இருக்கை வசதி, குடிநீர், மின் விசிறிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கோடை வெயிலில் நீண்ட வரிசைகளில் நின்று சான்றிதழ்கள் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை அவர்களின் பள்ளிகளிலேயே வழங்கும் திட்டம் குறித்து அ.தி.மு.க., உரிமை மீட்பு குழுவின் கோரிக்கை ஏற்று முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். ஆனால், இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
எனவே அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் குடிநீர், மின் விசிறிகள் மற்றும் இட வசதி மற்றும் இருக்கைகள் உடனடியாக ஏற்படுத்துதல். கோடைகால சூழ்நிலையை பொருத்து, பொதுமக்கள் நிழலில் நின்று சேவை பெறும் வகையில் பசுமை பந்தல்களை அமைத்தல். பொதுப்பணித்துறையின் குடிநீர் பிரிவின் மூலம் தாலுகா அலுவலகங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்தல். பள்ளிகளிலேயே சான்றிதழ்கள் வழங்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்.
எனவே, கோரிக்கை குறித்து கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு சீரான சேவையை உறுதி செய்ய வேண்டும்.