தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நீர் நிலைகளை ஆய்வு செய்ய ஓம்சக்தி சேகர் கோரிக்கை

 நீர் நிலைகளை ஆய்வு செய்ய ஓம்சக்தி சேகர் கோரிக்கை

 நீர் நிலைகளை ஆய்வு செய்ய ஓம்சக்தி சேகர் கோரிக்கை


ADDED : நவ 30, 2025 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நீர் நிலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து அதிகப்படியான நீரை ஒரே நேரத்தில் வெளியேற்றுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் அறிக்கை;

புதுச்சேரியில், கடந்த முறை பெய்த கன மழையில், சில பகுதிகளில் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றது. அதற்கு காரணமாக, இரவு நேரங்களில் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த சூழ்நிலை மீண்டும் உருவாகதவாறு அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் கன மழை பெய்து வருவதால், ஏரிகளில் இருந்து மழைநீரை முன்கூட்டியே திறந்து விடுவிதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதுச்சேரி ஏரிகளில் இதுவரை எந்த அதிகாரியும் நேரடியாக நிலைமையை ஆய்வு செய்ததாக தெரியவில்லை.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் சென்று அனைத்து நீர்நிலைகளையும் ஆய்வு செய்து, அவற்றின் தற்போதைய நிலை, கொள்ளளவு, நீர் வெளியேற்றுவதற்கான அவசியம் ஆகியவற்றை மதிப்பீடு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us