/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய வல்லுநர் குழு ஓம்சக்தி சேகர் கோரிக்கை
/
அரசு பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய வல்லுநர் குழு ஓம்சக்தி சேகர் கோரிக்கை
அரசு பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய வல்லுநர் குழு ஓம்சக்தி சேகர் கோரிக்கை
அரசு பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய வல்லுநர் குழு ஓம்சக்தி சேகர் கோரிக்கை
ADDED : பிப் 14, 2025 04:27 AM
புதுச்சேரி: அரசு பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தினார்.
அவரது அறிக்கை;
புதுகுப்பம் அரசு நடுநிலை பள்ளியில் கை கழுவ அமைக்கப்பட்ட தொட்டி இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது மட்டுமல்லாது மாநிலத்தில் பல அரசு பள்ளிகளில் இதுபோன்ற நிலை உள்ளன.
பொதுப்பணித்துறை சிறப்பு கட்டடங்கள் பிரிவின் கீழ் இப்பள்ளி கட்டடங்கள் வருகிறது.
இதற்கான அலுவலகம் கல்வித்துறை வளாகத்தில் அமைந்துள்ளது.ஆண்டு பராமரிப்பு பணி என்பதை சம்பந்தப்பட்ட சிறப்பு கட்டட பிரிவானது மேற்கொள்ள வேண்டும். அதனை உரிய முறையில் செய்யாததால் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
எனவே, அரசு பள்ளிகளின் கட்டடங்களின் உறுதி தன்மையை உடனடியாக ஆய்வு செய்ய வல்லுனர் குழு ஒன்றை கல்விதுறை அமைச்சர் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தக் குழுவில் பொதுப்பணித்துறை, கல்வித்துறை, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள், கல்வி ஆர்வலர்களை இடம் பெற செய்ய வேண்டும். இதேபோல், தனியார் பள்ளிகளையும் அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.