/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி பகுதிகளில் போலீஸ் ரோந்தை அதிகரிக்க ஓம் சக்தி சேகர் கோரிக்கை
/
பள்ளி பகுதிகளில் போலீஸ் ரோந்தை அதிகரிக்க ஓம் சக்தி சேகர் கோரிக்கை
பள்ளி பகுதிகளில் போலீஸ் ரோந்தை அதிகரிக்க ஓம் சக்தி சேகர் கோரிக்கை
பள்ளி பகுதிகளில் போலீஸ் ரோந்தை அதிகரிக்க ஓம் சக்தி சேகர் கோரிக்கை
ADDED : மார் 13, 2024 12:00 AM
புதுச்சேரி : பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அருகே கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க போலீஸ் ரோந்தை அதிகரிக்க வேண்டும் என, ஓ.பி.எஸ் அணி செயலாளர் ஓம்சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி மாநிலத்தில் பெருகி வரும் போதை கலாசாரத்தால் படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
சமீபத்தில் நடந்த சிறுமியின் கொலை போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது.
பள்ளிகளில் மாணவர்களுக்கு போதைப்பொருட்களை கொடுத்து, அவர்களை அடிமையாக்க சட்ட விரோத கும்பல் சுற்றி வருகிறது. நான் எம்.எல்.ஏ.,வாக, 10 ஆண்டுகள் இருந்த வரையில் கஞ்சா, போதை பொருட்கள், கள்ளச்சாராயம் ஆகியவை தொகுதிக்குள் நுழைய விடவில்லை.
ஆனால் தற்போது இவை அனைத்தும் மிக சுதந்திரமாக கிடைக்கும் நிலை உள்ளது.
தாய்மார்கள், பெண்களின் எண்ணமெல்லாம் போதை பொருட்கள் முற்றிலுமாக புதுச்சேரியில் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான்.
இதனை நிறைவேற்ற பள்ளிகளுக்கு அருகே கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் ரோந்தை அதிகப்படுத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில் முதல்வர் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

