/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாய்க்கால்களை துார் வார ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
/
வாய்க்கால்களை துார் வார ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
வாய்க்கால்களை துார் வார ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
வாய்க்கால்களை துார் வார ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
ADDED : ஆக 20, 2025 06:49 AM
புதுச்சேரி : பருவமழை துவங்கும் முன், வாய்க்கால்களை துார் வார வேண்டும் என, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு மனு அனுப்பியுள்ளார்.
மனு விபரம்:
கடந்த ஆண்டு கனமழை பெய்ததால், புதுச்சேரி முழுதும் மழைநீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. நெல்லிதோப்பு தொகுதியில் அண்ணா நகர், டி.ஆர்.நகர், வேல்முருகன் நகர், சத்தியா நகர், திருமால் நகர், சக்தி நகர் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இப்பிரச்னையை போக்க ராஜிவ்காந்தி மருத்துவமனை பக்கவாட்டு வாய்க்காலை, தேசிய நெடுஞ்சாலையை தாண்டி அய்யனார் கோவில் அருகே வலதுபுறமாக திருப்பி, புதிய வாய்க்கால் ஏற்படுத்தி இந்திர சிக்னல் அருகே உள்ள வாய்க்காலில் இணைத்தால் டி.ஆர்., நகர் பகுதியில் தண்ணீர் தேங்காமல் தடுக்கலாம்.
சத்தியா நகர், மெயின்ரோட்டில் உள்ள வாய்க்காலை ஆழப்படுத்தி, துர்வாரி புதிதாக சைடு கட்டையை அமைத்து, உயர்த்தினால் சத்தியா நகர், சக்தி நகர் பகுதிகளில் மழை நீர் தேங்குவதை தடுக்கலாம்.
சாரம் பாலம் முதல் வேல்முருகன் நகர் வரையில் உள்ள வாய்க்காலை முறையாக துார்வர வேண்டும். சேதமடைந்த பக்கவாட்டு கட்டைகள் புதிதாக அமைக்க வேண்டும். மேற்கண்ட பணிகளை மழைக்காலம் துவங்கும் முன், துவங்க உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.