/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஓம்சக்தி சேகர் மனு
/
தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஓம்சக்தி சேகர் மனு
ADDED : நவ 13, 2025 06:45 AM

புதுச்சேரி: 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை திறந்தவெளியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டுமென அ.தி.மு.க. உரிமை மீட்பு குழு மாநிலசெயலாளர் ஓம்சக்தி சேகர், தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் நடந்து வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் தகுதி வாய்ந்த ஒவ்வொரு வரும் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை சரிபார்க்கும் வசதி பெறுவது மிக முக்கியமானது.
தற்போது, 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு புதுப்பிப்பு பணிகள் நடந்து வருகிறது.
அந்த வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் மட்டுமே உள்ளது. அதனை பொதுமக்கள் நேரடியாகப்பார்க்கும் வசதி இல்லை.எனவே, 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் நகலை அனைத்து அங்கன்வாடி மையங்கள், ஓட்டுச்சாவடி மையங்கள், ஆதார் சேவை மையங்கள் உள்ளிட்ட திறந்தவெளிகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
அதன் மூலம் தங்களின் பெயர்கள் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். தவறுதலாக பெயர் நீக்கம் அல்லது திருத்தங்கள் தேவைப்பட்டால் உடனடியாக கோரிக்கை செய்யவும் வசதி கிடைக்கும்.
வாக்காளர்களிடம் வழங்கப்படும் விண்ணப்ப படிவம் தொலைந்து விட்டாலோ, தவறாக நிரப்பப்பட்டாலோ, மாற்று படிவத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இணையதளத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியையும் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

