/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில்களுக்கு தனி அதிகாரியை நியமிக்க முதல்வரிடம் ஓம்சக்திசேகர் வலியுறுத்தல்

ADDED : அக் 01, 2024 06:23 AM

புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதி கோவில்களுக்கு தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு புதுச்சேரி மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுபாட்டில் இருந்த கோவில்களில் அறங்காவல் குழுவினர் மூலம் கோவில் நிர்வாகங்களால் நிர்வாகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பின்படி துறைக்கு சொந்தமான கோவில்களில் தனி அதிகாரி மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் நெல்லித்தோப்பு தொகுதி ஆனந்த முத்துமாரியம்மன் கோவில், ஜெயங்கொண்டம் மாரியம்மன் கோவில், காராமணிக்குப்பம் சுப்பிரமணிய கோவில் உள்ளிட்ட கோவில்களில் இதுவரை தனி அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட கோவில்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்த புகார்களை சரி செய்ய முடியாத நிலை உள்ளது. கோவில்களின் சொத்துகள் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே முதல்வர் நேரடியாக தலையிட்டு இக்கோவில்களுக்கு தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. சந்திப்பின்போது சபாநாயகர் செல்வம் உடனிருந்தார்.