ADDED : ஆக 26, 2026 04:29 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: சேதராபட்டு அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, கல்லுாரித் தலைவர் நித்தியானந்தன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சிவசங்கரி முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி திலகவதி மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து பேசினார்.
விழாவில், ஓணம் பண்டிகையின் சிறப்பையும், அதன் பாரம்பரிய மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பூக்கோலம் அமைத்தல் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் தினேஷ்பிரியா, ஹரிணி ஆகியோர் செய்திருந்தனர்.
