/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
15 கிலோ குட்கா பறிமுதல் ஒருவர் கைது
/
15 கிலோ குட்கா பறிமுதல் ஒருவர் கைது
ADDED : ஆக 09, 2025 07:31 AM
புதுச்சேரி : ஒதியம்பட்டில் 15 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர். வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். ஒதியம்பட்டு அரசு பள்ளி அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக போலீசா ருக்கு தகவல் வந்தது.
அங்கு சென்ற போலீசார், சந்தேகப்படும் படி நின்றிருந்த காரை சோதனை செய்தனர். அதில், மூட்டையில் தடை செய்யப்பட்ட ரூ. 13 ஆயிரம் மதிப்பிலான 15 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரில் இருந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அவர், ஒதியம்பட்டைச் சேர்ந்த ஞானபில்டன் குமார், 42; என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, குட்கா பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.