ADDED : செப் 23, 2024 08:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, புவனகிரி அடுத்த ஆதிவராக நத்தம் கிழக்குத் தெருவை சேர்ந்த விஜய், 24; என்பவர், அப்பகுதியில் கஞ்சா விற்றது தெரியவந்தது. அதையடுத்து, புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து, விஜயை கைது செய்தனர். அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.